#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தளபதி 64 படப்பிடிப்பிலிருந்து லீக்கான வீடியோ! உற்சாகத்தில் பகிரும் தளபதி ரசிகர்கள்!
விஜய், இயக்குனர் அட்லி கூட்டணியில் மூன்றாவது முறையாக இணைந்து உருவாகிய பிகில் திரைப்படம் தீபாவளியன்று வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது. மேலும் வசூல் சாதனையும் படைத்தது .
அந்த படத்தை தொடர்ந்து விஜய், மாநகரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் தளபதி64 படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக ரஜினியுடன் பேட்ட படத்தில் நடித்த மாளவிகா மோகன் நடிக்கவுள்ளார்.
மேலும் அப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாகவும் , மலையாள நடிகர் ஆன்டனி வர்கீஸ், நடிகர் சாந்தனு, நடிகர் ப்ரவீன்குமார் ஆகியோர் நடிக்கவுள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் விஜய் 64வது படப்பிடிப்பில் எடுக்கப்பட்டதென ஒரு வீடியோ சமூகவலைத்தள பக்கத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உள்ளார், அவருடன் செல்பி எடுக்க ரசிகர்கள் அவரை மொய்த்துள்ளனர். இந்த வீடியோ தற்போது வெளியாகி தளபதி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
.@Dir_Lokesh from the spot of #Thalapathy64 @Vijay64FilmOff !! pic.twitter.com/5uivr9GXjv
— Online Thalapathy Fans Club (@OTFC_Off) December 3, 2019