மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விஜய்யின் தளபதி 68 படத்தின் டைட்டில் இது தான்? வெளியான அசத்தல் தகவல்.!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தளபதி விஜய். தற்போதைய இவர் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
மேலும், இந்த படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், மீனாட்சி சவுத்ரி, சினேகா, வைபவ், அரவிந்த், பிரேம்ஜி உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் படிப்பிடிப்பு சென்னை மற்றும் தாய்லாந்தில் நடைபெற்ற வந்தது.
தற்போது ஹைதராபாத்தில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்தப் படத்தின் டைட்டில் போஸ்டர் வரும் டிசம்பர் 31ஆம் தேதி இரவு 12 மணிக்கு வெளியாகும் என கூறப்படுகிறது.
இதனிடையே தளபதி 68 படத்தின் தலைப்பு பாஸ் மற்றும் பசில் என தகவல்கள் வெளியாகியது. ஆனால் தயாரிப்பு நிறுவனம் தரப்பிலிருந்து மறுக்கப்பட்டது. இந்த நிலையில் லேட்டஸ்ட் தகவலாக படத்திற்கு GOAT அதாவது Greatest Of All Time என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.