மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தளபதி 68 திரைப்படத்தின் ஹீரோயின் யார்.? நான்கு நடிகைகள் இடையே தீவிர போட்டி!
தளபதி 68 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிவிட்டது. இந்தத் திரைப்படத்தினை ஏஜிஎஸ் நிறுவனத்தின் சார்பாக அர்ச்சனா கோரும் தயாரிக்கிறார். மேலும் தளபதி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த விஜய் வெங்கட் பிரபு மற்றும் யுவன் கூட்டணி முதல் முறையாக இணைய இருக்கிறது.
தற்போது லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பில் மும்முரமாக இருக்கிறார் தளபதி. லியோ திரைப்படத்தின் சூட்டிங் பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்தத் திரைப்படம் ஆயுத பூஜையை முன்னிட்டு வருகின்ற அக்டோபர் மாதம் 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
லியோ திரைப்படத்தின் சூட்டிங் முடிந்ததும் எந்தவித ஓய்வும் எடுக்காமல் நேரடியாக தளபதி 68 திரைப்படத்திற்கான படப்பிடிப்பில் விஜய் கலந்து கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் தீவிரமாக இருக்கிறார் வெங்கட் பிரபு. மேலும் திரைப்படத்தில் கதாநாயகிகளுக்கான தேர்வு மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இதுவரை மூன்று நடிகைகளின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு இருக்கின்றன. சீதாராமன் திரைப்படத்தில் நடித்த மிருணால் தாக்கூர் வெங்கட் பிரபுவுடன் கஸ்டடி படத்தில் பணியாற்றிய கீர்த்தி ஷெட்டி மற்றும் பிரியங்கா மோகன் ஆகியோரின் பெயர்கள் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. இவர்கள் தவிர நயன்தாரா மற்றும் தமன்னா ஆகியோரின் பெயர்களும் பரிசீலிக்கப்படுவதாகவும் படக்குழுவிற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.