மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"அடேங்கப்பா..." தளபதி 68 திரைப்படத்திற்கு விஜய் சம்பளம் எவ்வளவு தெரியுமா.?
தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகமாகி தனது திறமையினால் இன்று டாப் 3 நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தளபதி விஜய். சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் உலகநாயகன் கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக தமிழ் சினிமா என்றாலே நினைவுக்கு வருவது தளபதி விஜய் தான்.
இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்தத் திரைப்படம் வருகின்ற அக்டோபர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திரைப்படத்திலேயே விஜய்க்கு சம்பளமாக 150 கோடி வழங்கப்பட்டுள்ளதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் தளபதியின் 68வது படத்தினை பற்றிய அறிவிப்பு தற்போது வெளியாகியிருக்கிறது. அதன்படி ஏஜிஎஸ் நிறுவனம் தளபதி 68 திரைப்படத்தை தயாரிக்க இருக்கிறது. இந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். இந்தத் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருக்கிறார் இந்தக் கூட்டணி முதல் முறையாக தமிழ் சினிமாவில் அமைய இருக்கிறது.
இதன் காரணமாக இந்த திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பும் பெரிய அளவில் உள்ளது. இந்தத் திரைப்படத்தில் நடிக்க விஜய் 175 கோடி ரூபாய் சம்பளம் கேட்டதாகவும் ஆனால் ஏஜிஎஸ் நிறுவனம் அவருக்கு 200 கோடி ரூபாய் சம்பளம் வழங்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. லியோ திரைப்படம் படப்பிடிப்பு முடிவதற்கு முன்பாகவே நான் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பிசினஸ் செய்திருப்பதால் சின்ன மீனைப் போட்டு பெரிய மீனை பிடிக்க தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.