பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
அட.. சூப்பர்! நடிகர் தனுஷின் பிறந்தநாள் ஸ்பெஷல்! ரசிகர்களுக்கு விருந்தாக வெளிவந்த அறிவிப்பு!!
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து டாப் நடிகராக வலம் வருபவர் தனுஷ். அவர் தற்போது தெலுங்கு ஹிந்தி என சினிமா துறையையே கலக்கி வருகிறார். அவரது கைவசம் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம், செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் போன்ற படங்கள் உள்ளன. மேலும் தனுஷ் பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் 'வாத்தி' என்ற படத்திலும் நடித்துள்ளார்.
இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் நாக வம்சி தயாரித்துள்ளார். தமிழில் வாத்தி என்ற பெயரில் உருவாகும் இப்படம் தெலுங்கில் 'சார்' என்ற பெயரில் வெளியாகிறது. இப்படத்தில் ஹீரோயினாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில் இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசருக்காக ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் இன்று தனுஷின் பிறந்தநாள் பரிசாக வாத்தி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. மேலும், நாளை மாலை படத்தின் டீசர் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளனர்.