வல்லான் திரைப்படத்துக்கு யுஏ சான்றிதழ்; தணிக்கைக்குழு அறிவிப்பு.!
ஏ ஆர் முருகதாஸ் மன்னிப்பு கேட்க வேண்டும்! அதிரடியாக போஸ்டர் ஒட்டிய தர்பார் வினியோகஸ்தர்கள்! இதுதான் காரணமா?
AR முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தர்பார். அப்படத்தில் நடிகர் ரஜினி மும்பை போலீஸ் ஐ.பி.எஸ். அதிகாரியாக நடித்துள்ளார். மேலும் ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். லைகா புரொடக்ஷன் தயாரிப்பு இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இந்நிலையில் இப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகி கலவையான விமர்சனத்தையே பெற்றது.
இந்நிலையில் தர்பார் திரைப்படம் திரையரங்குகளில் போதுமான வசூல் ஈட்டவில்லை எனவும், அதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் வினியோகஸ்தர்கள் சார்பில் குற்றம் சாட்டப்பட்டது. மேலும் தங்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கோரி நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குனர் முருகதாஸ் ஆகியோரை சந்திக்க முயற்சி செய்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு முருகதாஸ் வீட்டிற்கு சென்ற விநியோகஸ்தர்களுக்கும், இயக்குனர் முருகதாஸின் உதவி இயக்குநர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் விநியோகஸ்தர்கள் திரைப்படத்தில் பல கோடி நஷ்டம் அடைந்தது, தார்மீக அடிப்படையில் அலுவலகம் வந்த விநியோகஸ்தர்களை காவல்துறையை விட்டு அவமானப்படுத்திய ஏ ஆர் முருகதாஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என சென்னையில் ஆங்காங்கே போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் எங்களுக்கு ஏற்பட்ட அவமானத்திற்கான எதிர்வினைதான் இது என விநியோகஸ்தர்கள் கூறியுள்ளனர்.