மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சர்ச்சையை ஏற்படுத்திய தி கேரளா ஸ்டோரி திரைப்படம் ஓடிட்டு ரிலீஸ் எப்போது? படக்குழு அறிவிப்பு!
நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு மே மாதம் வெளியான தி கேரளா ஸ்டோரி திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி வசூல் சாதனை படைத்தது. இந்தப் படத்தின் கதை கேரளாவில் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு வருவதாகவும், குறிப்பாக ஹிந்து பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதாகவும் எடுக்கப்பட்டிருந்தது.
இந்த படத்திற்கு கடும் விமர்சனம் எழுந்த நிலையில், படத்தை தடை செய்ய போராட்டங்கள் நடைபெற்றது. ஆனால் இந்த படம் நாடு முழுவதும் வெளியாகி 200 கோடிக்கு மேல் சூல் செய்து சாதனை படைத்தது.
இந்த நிலையில் திரையரங்களில் வசூலை விலை வாரிக்குவித்த தி கேரளா ஸ்டோரி திரைப்படம் 10 மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, வரும் பிப்ரவரி 16ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.