பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
ப்பா.. வேற லெவல்! செம ஸ்டைலாக கெத்து காட்டும் லெஜென்ட் சரவணன்! அட்டகாசமான போஸ்டருடன் வெளிவந்த மாஸ் அப்டேட்!!
லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள் நடிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அவர் தனது கடை விளம்பரங்களில் ஹன்சிகா, தமன்னா போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து அசத்தலாக ஆட்டம் போட்டு அனைவரையும் வியக்க வைத்தார். இந்த நிலையில் லெஜெண்ட் சரவணன் தற்போது ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார்.
தி லெஜன்ட் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை இரட்டை இயக்குநர்களான ஜேடி - ஜெர்ரி இயக்கியுள்ளனர். மேலும் இப்படத்தை சரவணனே தயாரித்துள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா நடித்துள்ளார். தி லெஜண்ட் படத்திற்கு ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், இந்த படத்தின் மியூசிக்கல் உரிமையை பிரபல இசை நிறுவனமான திங்க் மியூக் கைப்பற்றியுள்ளதாக புதிய போஸ்டருடன் அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் படத்தின் முதல் பாடல் வரும் 9 ஆம் தேதி வெளியாகவுள்ளதாகவும் அசத்தலான போஸ்டருடன் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் லெஜென்ட் சரவணன் செம ஸ்டைலாக உள்ளார்.