மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தி லெஜெண்ட் ஓடிடி ரிலீஸ் எப்போ தெரியுமா?? மாஸாக வந்த அறிவிப்பு.! சர்ப்ரைஸில் ரசிகர்கள்!!
பிரம்மாண்ட சரவணா ஸ்டோர் நிறுவனத்தின் உரிமையாளரான சரவணன் அருள் விளம்பரங்களில் நடித்து மக்களிடையே பிரபலமானார். இவர் ஹீரோவாக அவதாரம் எடுத்து கடந்த ஆண்டு வெளிவந்த தி லெஜன்ட் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் விமர்சனரீதியாக வரவேற்பை பெற்றது.
இப்படத்தில் லெஜன்ட் சரவணனுக்கு ஜோடியாக, ஹீரோயினாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தாலே நடித்தார். மேலும் அவர்களுடன் விவேக்,
ரோபோ சங்கர், தேவதர்ஷினி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். இந்தப் படத்தை ஜேடி ஜெர்ரி இயக்கியிருந்தனர்.படம் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற பல மொழிகளிலும் வெளிவந்தது.
இந்நிலையில் ஓடிடியில் எப்பொழுது ரிலீஸாகும் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்த நிலையில் தி லெஜன்ட் திரைப்படம் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இப்படம் இன்று மார்ச் 3 டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.