மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்னடா இது! அஜித்துக்கும், அஜித் ரசிகர்களும் இப்படி ஒரு சோதனை! அடுச்சது யார்னே தெரியல!
இயக்குனர் சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்துவரும் திரைப்படம் விசுவாசம். வீரம், வேதாளம், விவேகம் என மூன்று படங்களை கொடுத்த இந்த கூட்டணி நான்காவது முறையாக கூட்டணி சேர்ந்துள்ளது.விசுவாசம் படத்தின் ட்ரைலர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் வரும் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 10 ஆம் தேதி அன்று விசுவசம் படம் வெளியாக உள்ளது. மேலும் அதே நாளில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த பேட்ட படமும் வெளியாக இருப்பதால் ரஜினி, அஜித் இரத்தரப்பு ரசிகர்கள் இடையே ஆர்வம் அதிகரித்துள்ளது.
இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாக இருப்பதால் ஏற்கனவே இரு தரப்பு ரசிகர்களும் ட்ரைலர் காட்சிகளை ஒப்பிட்டு பனி போரில் ஈடுபட்டனர். இந்நிலையில் தேனி மாவட்டத்தில் பல்வேரு இடங்களில் ஓட்ட பட்டிருந்த விசுவாசம் பட போஸ்டர்கள் மீது யாரோ மர்ம நபர்கள் சாணி அடித்துள்ளனர்.
சாணி அடித்திருப்பதை பார்த்த அஜித் ரசிகர்கள் அதைப்பற்றி வீட்டின் உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈட்பட்டுள்ளார். அதனை தொடர்ந்து வீட்டின் உரிமையாளர் ஜெயமணி கொடுத்த புகாரின் அடிப்படையில் அஜித் ரசிகர்களான அஜித்குமார், பாலமுருகன், விஜய் உள்ளிட்ட 10 ரசிகர்கள் மீது ஆபாசமாக பேசியது, கொலை மிரட்டல் விடுத்தது என நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த தேனி போலீசார் 9 பேரை கைது செய்துள்ளனர்.