#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
திரிஷாவுக்கு இப்படியும் ஒரு ஆசையா? நிறைவேறுமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்
நடிகை திரிஷா தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களின் முன்னணி நடிகை ஆவார். ஆரம்பத்தில் சாமி, கில்லி போன்ற வெற்றி திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்றவர். திரைப்படங்களில் நடிக்கத் துவங்கும் முன் சென்னை அழகியாக 1999ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்பொழுது ஜெயலலிதா வேடத்தில் நடிக்க திரிஷா விருப்பம் தெரிவித்து உள்ளார்.
அண்மையில், மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்திரி வாழ்க்கையை மையமாக வைத்து தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியான நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு நல்ல வரவேற்ப்பை பெற்று, நடிகை கீர்த்தி சுரேஷை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது.
இதேபோல் திரையுலகில் வாழ்க்கை வரலாறு படங்கள் அதிகம் எடுக்கப்பட்டு வெற்றிபெற்றிருக்கிறது. அந்த வகையில் நடிகை சில்க் சுமிதா வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட 'தி டர்ட்டி பிக்சர்ஸ்' திரைப்படம் வெளியாகி வசூல் சாதனை செய்தது. மேலும் இந்த படத்தில் சில்க் சுமிதாவாக நடித்த நடிகை வித்யாபாலன் சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார்.
இதைதொடர்ந்து தோனி, சச்சின், மேரிகோம், உள்ளிட்ட பல விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்கள் 500 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது.
இதைதொடர்ந்து தற்போது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்கும் முயற்சிகள் நடக்கிறது. இந்த படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க திரிஷா விருப்பம் தெரிவித்து உள்ளார்.
ஜெயலலிதா மறைந்தபோது, தனியாக சென்று அவரது உடலுக்கு மலர் தூவி திரிஷா மரியாதை செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜெயலலிதா கையால் விருது வாங்கிய படத்தை தனது ட்விட்டர் முகப்பு படமாகவும் வைத்து இருக்கிறார்.
இதுகுறித்து திரிஷா கூறும்போது "சிறுவயதில் இருந்தே எனக்கு ஜெயலலிதாவை பிடிக்கும். ஜெயலலிதா வாழ்கையை சினிமா படமாக எடுத்தால் அவரது கதாப்பாத்திரத்தில் நடிக்க தாயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.