மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பும் திருச்சிற்றம்பலம்.. 5 நாட்களில் உலகளவில் வசூல் சாதனை..!! இவ்வளவு கோடியா?..!!
இயக்குனர் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 18-ஆம் தேதி வெளியான திரைப்படம் திருச்சிற்றம்பலம். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்த நிலையில், நித்யாமேனன், பிரகாஷ்ராஜ், ராஷிகண்ணா, பாரதிராஜா மற்றும் பிரியா பவானி சங்கர் போன்ற பிரபலங்கள் நடித்திருந்தனர்.
இப்படம் வெளியான நாளிலிருந்து இதுவரையிலும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுவருகிறது. தனுஷ் நடித்த கர்ணன் திரைப்படத்திற்கு பின் தனுஷின் திரைவாழ்க்கையில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றிபடமாக அமைந்தது திருச்சிற்றம்பலம்.
இந்த நிலையில் திருச்சிற்றம்பலம் படம் வெளியாகி ஐந்து நாட்கள் முடிவடைந்த நிலையில், உலகளவில் கிட்டத்தட்ட ரூ.60 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.