மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்ன இதெல்லாம் சொல்றாங்க.. அசிங்கபடுத்திய ரவீனா குடும்பத்தினர்.! கவலையில் புலம்பும் போட்டியாளர்!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை கவர்ந்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் 80 நாட்களைக் கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டுள்ளது. இந்நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கு மற்றும் போட்டியாளர்களுக்கு மிகவும் பிடித்தமான FREEZE TASK நடைபெற்று வருகிறது. இந்த டாஸ்க்கில் ஒவ்வொரு போட்டியாளர்களின் குடும்பத்தினரும் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகை தந்துள்ளனர்.
இதனால் நிகழ்ச்சி மிகவும் சுவாரசியமாகவும், உற்சாகத்துடனும் சென்று கொண்டுள்ளது. இந்த நிலையில் நேற்று ரவீனாவின் ஆன்ட்டி மற்றும் சகோதரர் வருகை தந்திருந்தனர். அவர்கள் மணியுடன் பழகுவது குறித்து கண்டித்து பேசியிருந்தனர். மேலும் மணியிடமும் தனியாக விளையாடுங்கள் எனக் கூறியிருந்தனர்.
இந்நிலையில் ரவீனா, மணியிடம் பெருமளவில் பேசாமல் இருந்துள்ளார். இதனால் கவலையடைந்த மணி விக்ரம் மற்றும் தினேஷிடம் இதுகுறித்து புலம்பியுள்ளார். மேலும் ரவீனாவிடமும் அசிங்கப்படுத்திட்டாங்க, என்ன இதெல்லாம் பேசுறாங்க! என கூறியுள்ளார். மேலும் ரவீனாவின் குடும்பத்தை கடுப்பாக்கும் வகையில் பேசியுள்ளார். இந்த ப்ரமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.