மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா.. ஒரே ஜாலிதான்! நெருக்கமாக கட்டிபிடித்து கும்மாளம் போட்ட நடிகை த்ரிஷா! யாருடன் பார்த்தீங்களா! வைரல் வீடியோ!!
தமிழ் சினிமாவில் சூர்யா நடிப்பில் வெளிவந்த மௌனம் பேசியதே திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மக்களிடையே பெருமளவில் பிரபலமானவர் நடிகை த்ரிஷா. அதனைத் தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த நிலையில் த்ரிஷா அஜித், விஜய், விக்ரம், சிம்பு உள்ளிட்ட பல நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மேலும் அவர் முன்னணி நடிகையாகவும் கொடிகட்டி பறந்தார். த்ரிஷா கைவசம் தற்போது கர்ஜனை, ராங்கி, சதுரங்க வேட்டை 2 போன்ற திரைப்படங்கள் உள்ளன. மேலும் திரிஷா மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை என்ற ரோலில் நடித்துள்ளார். மேலும் அவர் தளபதி 67 படத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
39 வயது நிறைந்த திரிஷா இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இந்த நிலையில் அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை சோபாவில் படுத்தவாறு தனது பெண் தோழிகளுடன் நெருக்கமாக கட்டிபிடித்து கும்மாளம் போட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனைக் கண்ட ரசிகர்கள் பலரும் பலவிதமான கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.