மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அச்சோ.. அள்ளுதே! செம சிம்பிளாக, இளசுகளை சுண்டியிழுத்த நடிகை த்ரிஷா! வைரல் புகைப்படங்கள்!!
தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 22 ஆண்டுகளுக்கு மேலாக விஜய், அஜித், கமல் போன்ற பல முன்னணி நடிகருடன் ஜோடி சேர்ந்து கதாநாயகியாக நடித்து தற்போது வரை ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் நடிகை திரிஷா. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
த்ரிஷா தற்போது மணிரத்னம் இயக்கத்தில் மாபெரும் பொருட்செலவில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவரது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது. மேலும் படத்தில் த்ரிஷாவின் கதாபாத்திரத்தின் மீது எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் படப்பிடிப்பு தளத்தில் திரிஷா பெரிதும் மேக்கப் இன்றி மிகவும் எளிமையாக ஊதா நிற புடவையில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதனைக் கண்ட ரசிகர்கள் உங்களுக்கு மட்டும் வயது ஏறஏற அழகும் கூடுதே என கமெண்ட் செய்து வருகின்றனர்.