மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சீறிப்பாயும் காளை! மிரட்டலாக செம கெத்தாக வெளியானது வாடிவாசல் டைட்டில் லுக்!
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. சூரரைப்போற்று படத்தின் வெற்றியை தொடர்ந்து சூர்யா சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார். மேலும் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.
தாணு தயாரிக்கும் இப்படம் ஜல்லிக்கட்டு கதைக்களத்தை மையமாகக்கொண்டு உருவாகிறது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். வாடிவாசல் படம் குறித்த தகவல்கள் எப்போது வெளியாகும் என சூர்யா ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்திருந்தனர். இந்த நிலையில் வாடிவாசல் படத்தின் டைட்டில் லுக் இன்று வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியிருந்தது.
நம் வீரத்தையும் வரலாற்றையும் சுமந்து நிற்கும் #வாடிவாசல் திரைப்படத்தின் டைட்டில் லுக்கை உங்கள் பார்வைக்கு வெளியிடுவதில் பேரின்பமும் பெருமையும் கொள்கிறேன் #VaadiVaasalTitleLook @Suriya_offl @VetriMaaran @gvprakash #VaadiVaasal pic.twitter.com/R6HXjYxvL2
— Kalaippuli S Thanu (@theVcreations) July 16, 2021
அதனைத் தொடர்ந்து இன்று வாடிவாசல் படத்தின் டைட்டில் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதனை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு, நம் வீரத்தையும் வரலாற்றையும் சுமந்து நிற்கும் வாடிவாசல் திரைப்படத்தின் டைட்டில் லுக்கை உங்கள் பார்வைக்கு வெளியிடுவதில் பேரின்பமும் பெருமையும் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். இதன் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் அல்லது அக்டோபரில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.