Toxic: யாஷ் பிறந்தநாள் கொண்டாட்டம்.. டாக்சிக் படத்தின் அசத்தல் கிலிம்ப்ஸ் வீடியோ.!
நான் வனிதா பையன் இல்ல - மகனின் பதிவுக்கு பதிலடி கொடுத்த வனிதா..! பளாருன்னு அறங்சுடுவன்.. என்ன சொல்லிருக்காரு பாருங்களேன்?..!!
தமிழ் திரையுலகில் மிகப்பிரபல நட்சத்திர தம்பதிகளான விஜயகுமார் - மஞ்சுளாவின் மகள் தான் வனிதா. இவர் சந்திரலேகா படத்தின் மூலமாக சினிமா உலகிற்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து சில படங்களில் நடித்த இவர், சினிமாவில் இருந்து சில காலங்களாக விலகியிருந்தார்.
மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பயங்கர பிரபலமடைந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் பிக்பாஸ் ஜோடிகள் என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். ஆனால் இவருக்கும், நிகழ்ச்சிநடுவராக இருந்த ரம்யா கிருஷ்ணனுக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு பாதியிலிருந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் தொலைக்காட்சி நிகழ்ச்சி, படங்கள் என எதையும் விட்டுவைக்காமல் பிஸியாக இருக்கிறார். இவருக்கு 3 திருமணம் நடந்து விவாகரத்தானது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. இவர் இயக்குனர் ராபர்ட் மாஸ்டருடன் காதலில் இருந்து வந்தார்.
இருவரும் சேர்ந்து திருமணம் செய்து கொண்டிருந்த நிலையில், இருவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டு பிரிந்து விட்டனர். அதன் பின்னர் தனது இரண்டு மகள்களுடன் தனியாக வசித்து வந்த வனிதா, பீட்டர் பவுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவரையும் விட்டு பிரிந்து வந்தார்.
இப்படி வனிதா மூன்று முறை திருமணம் செய்து தோல்வியில்தான் முடிந்துள்ளது. கடந்த 2000-ஆம் ஆண்டு ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டதை தொடர்ந்து, வனிதா ஆகாஷ் தம்பதிகளுக்கு திருமணம் முடிந்த ஓராண்டிலே ஸ்ரீஹரி என்ற மகனும், ஒரு மகளும் பிறந்தனர்.
அதன் பின் இவர்களுக்கு விவாகரத்தானதால், தனது மகனை தன்னுடன் அனுப்பிவிட வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார் ஆகாஷ். இந்த நிலையில் வனிதாவின் மகன் ஸ்ரீஹரி இன்ஸ்டாகிராம் ரசிகர் ஒருவருக்கு பதில் அளித்துள்ளார்.
அதில் "வனிதாவோட பையனா நீங்க" என்று ஒருவர் கேட்டிருந்த நிலையில், "நான் ஆகாஷோட பையன் ப்ரோ" என்று கூறி வனிதாவிற்கும், தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை உறுதி செய்தார். சமீபத்தில் வனிதா பேட்டி ஒன்றில் பங்கேற்ற நிலையில், "அந்த கமெண்டு வனிதாவிடம் காண்பிக்கப்பட்டது.
அதனை படித்த வனிதா உண்மை தானே, எனக்கும், அவனுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. நேரில் பார்த்தால் பளாரென அறைந்து விடுவேன். அவன் ஆள் வளர்ந்துவிட்டான். ஆனால் அறிவு வளரவில்லை. இரண்டும் லூசு தான். அவனுக்குள் விஜயகுமார் ரத்தம் இருக்கிறது" என்று கூறியுள்ளார்.