#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
15 வயசுல எனக்கு விபரமில்லை.. ஆனா இப்போ.., - உண்மையை போட்டுடைத்த வனிதா..! தரமான சம்பவம் இருக்கு..!!
தமிழ் திரையுலகில் விஜயகுமார் - மஞ்சுளா தம்பதிக்கு மகளாக பிறந்தவர் வனிதா. இவர்தொடக்கத்தில் சினிமாவில் பல படங்களில் நடித்து வந்தாலும் பின் நாட்களில் நடிப்பை நிறுத்திக்கொண்டார்.
கணவர் மற்றும் தந்தையுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவரது வாழ்க்கையில் பல சோகங்கள் நடந்துவிட்டது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சமீபத்தில் அவர் மக்கள் மத்தியில் மீண்டும் பிரபலமடைந்தார்.
தற்போது வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் தன்னை தக்கவைத்து கொண்டு இருக்கிறார். சமீபத்தில் அவர் திருப்பதிக்கு சென்று விஐபி தரிசனம் மூலம் சாமி தரிசனம் செய்ததாக கூறப்பட்டது.
அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், "நான் நிறைய தமிழ் படங்களில் நடித்துள்ளேன். அந்த படங்கள் விரைவில் வெளியாக உள்ளது. நான் திரையுலகில் காலடி எடுத்து வைத்த போது மிகச்சிறிய பெண். அப்போது எனக்கு வெறும் 15 வயதுதான். திரைத்துறை பற்றி விபரம் இல்லை.
தற்போது அதனைப் பற்றி நன்கு புரிந்து இருக்கிறேன். புதிய தொழிலுக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. திரையில் எனது இரண்டாவது முயற்சிக்கு மக்களிடம் வரவேற்பு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் எனக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது" என்று தெரிவித்தார்.