"எனக்கு சினிமாவில் நடிப்பதற்கு சுத்தமாக பிடிக்காது" நடிகை நித்யா மேனன் கூறிய உண்மை....!?
கம்பீரமான தோற்றத்தில் பார்த்ததும் மிரளவைக்கும் நடிகை வரலக்ஷ்மி! இணையத்தை தெறிக்கவிடும் டேனி டீசர்!
தமிழ் சினிமாவில் சிம்புவுடன் இணைந்து போடா போடி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார் நடிகை வரலட்சுமி.அதனை தொடர்ந்து அவர் தாரை தப்பட்டை, விக்ரம் வேதா போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் கதாநாயகியாக நடித்துவந்த வரலட்சுமி வில்லியாக அவதாரமெடுத்து சண்டகோழி 2, சர்கார் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து அவர் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார். அதற்கு அடுத்தபடியாக நீயா இரண்டாம் பாகத்திலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் வரலட்சுமி சந்தான மூர்த்தி இயக்கத்தில் உருவாகிவரும் டேனி என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். மேலும் இப்படத்தை பிஜி மீடியா வொர்க்ஸ் சார்பில் ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா தயாரிக்கிறார்.இப்படத்தில் சாயாஜி ஷிண்டே, வேல ராமமூர்த்தி, அனிதா சம்பத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில் தற்போது இப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.