"எனக்கு சினிமாவில் நடிப்பதற்கு சுத்தமாக பிடிக்காது" நடிகை நித்யா மேனன் கூறிய உண்மை....!?
நடிகை வரலக்ஷ்மி சரத்குமாருக்கு இப்படி ஒரு பெயரா? நீங்களே பாருங்க!
இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்புவுடன் போடா போடி என்ற படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை வரலக்ஷ்மி. இவர் பிரபல நடிகர் சரத்குமாரின் மகள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. போடா போடி படத்தை அடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார் வரலக்ஷ்மி.
விஜய்யுடன் சர்க்கார், விஷாலுடன் சண்டக்கோழி 2 , தனுசுடன் மாறி 2 போன்ற படங்களில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் வரலக்ஷ்மி. தற்போது தனி ஒரு கதாநாயகியாக டேனி என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை சந்தான மூர்த்தி என்பவர் இயக்குகிறார்.
படம் பற்றி பேசிய இயக்குனர், இந்த படம் தஞ்சாவூர் பகுதியில் நடக்கும் தொடர் கொலைகள் பற்றிய விசாரணை அடிப்படையில் அமைந்த கதையாகும். வரலட்சுமி இன்ஸ்பெக்டராக நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் நாய் ஒன்று நடிக்கிறது. போலீஸ் மோப்ப நாயான அதன் பெயர் தான் டேனி என்று தெரிவித்துள்ளார்.
படப்பிடிப்பு காட்சிகள் நடைபெறும் இடங்களில் உள்ள மக்கள் வரலட்சுமியை அவர்கள் வீட்டு பெண் போல பழகினார்கள். அவர் தொடங்கிய சேவ் சக்தி அமைப்புக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. எனவே அவர் பெயருக்கு முன்னால் மக்கள் செல்வி என்ற டைட்டிலை பயன்படுத்தி இருக்கிறோம்’ என்றார். வரலட்சுமியின் பிறந்தநாளான இன்று இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.