Toxic: யாஷ் பிறந்தநாள் கொண்டாட்டம்.. டாக்சிக் படத்தின் அசத்தல் கிலிம்ப்ஸ் வீடியோ.!
அம்மாடியோவ்.. 4 மாத கடின உழைப்பு.. உடல் எடையை முற்றிலும் குறைத்து படு ஸ்லிம்மாக மாறிய வரலட்சுமி சரத்குமார்..! வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்.!!
தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக வலம்வருபவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். இவர் முன்னணி நடிகரான சரத்குமாரின் மகள் ஆவார். தமிழில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த 'போடா போடி' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதன் பின்னர் இவர் பல படங்களில் நடித்திருக்கிறார்.
அதிலும் இவர் விஜய் நடிப்பில் வெளியான சர்க்கார் மற்றும் விஷால் நடிப்பில் உருவான சண்டைக்கோழி படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்த அசத்தியிருந்தார். மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பிற மொழி படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார்.
இவர் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்துவருவதால் தனது உடல் எடை விஷயத்தில் அக்கறை காட்டி வருகிறார். அத்துடன் நான்கு மாத உழைப்பின் பலனாக தற்போது உடல் எடையை முற்றிலும் குறைத்துள்ளார். இது குறித்து தனது ட்ரான்ஸ்லேஷன் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கும் வரலட்சுமி, "நான்கு மாத கடின உழைப்பின் மூலம் மாற்றத்தை கொண்டு வந்திருப்பதாக கூறியுள்ளார்."