மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா..அம்மணி செம ஹேப்பி!! ஃப்ளைட்டில் தளபதி விஜய்யை சந்தித்த பிரபல நடிகை!! விதவிதமாக வைரலாகும் செல்பி கிளிக்ஸ்!!
தமிழ் சினிமாவில் சிம்பு நடிப்பில் வெளிவந்த போடா போடி படத்தில் ஹீரோயினாக நடித்து அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி. அதனைத் தொடர்ந்து அவர் பல படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் அவர் சண்டகோழி 2, சர்கார் போன்ற படங்களில் வில்லியாகவும் நடித்து ரசிகர்களை மிரள வைத்துள்ளார்.
நடிகை வரலட்சுமி தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். மேலும் அவரது கைவசம் பல படங்கள் உள்ளன. நடிகை வரலட்சுமி சென்னையில் இருந்து ஹைதராபாத்திற்கு விமானத்தில் சென்றுள்ளார். அப்பொழுது அவர் விமானத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய்யை சந்தித்துள்ளார். இருவருக்கும் அருகருகே சீட்டாம்.
இந்நிலையில் தளபதியை கண்டு உற்சாகமடைந்த வரலட்சுமி அவருடன் விதவிதமாக செல்பி எடுத்துள்ளார். மேலும் அந்த புகைப்படங்களை அவர் இணையத்தில் பகிர்ந்த
நிலையில் அது வைரலாகி வருகிறது. தளபதி விஜய்யின் தீவிர ரசிகையான நடிகை வரலட்சுமி அவருடன் இணைந்து சர்க்கார் படத்தில் நடித்திருந்தார்.