மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"என் அப்பாவால தான் அந்த ஹிட் படங்களில் நடிக்க முடியாமல் போனது" வரலட்சுமி சரத்குமாரின் வைரலாகும் பேட்டி..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமார். இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான 'போடா போடி' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். முதல் படமே இவருக்கு கை கொடுக்கவில்லை.
இதனால் தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் தன் கவனத்தை திசை திருப்பிய வரலட்சுமி சரத்குமார், தற்போது தெலுங்கு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
மேலும், வரலட்சுமி சரத்குமார் தமிழில் தாரை தப்பட்டை, விக்ரம் வேதா, சண்டக்கோழி, சர்க்கார், மாரி, இரவின் நிழல், பொய்க்கால் குதிரை, காட்டேரி, கொண்டால் பாவம் போன்ற திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தற்போது 'மாருதி நகர் காவல் நிலையம்' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
தற்போது வரலட்சுமி சரத்குமார் ஒரு பேட்டியில் பாய்ஸ், காதல் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அப்பா என்னை அனுமதிக்கவில்லை. அப்பாவிற்கு நான் நடிப்பது பிடிக்கவில்லை. இரு ஹிட் படங்களிலும் நடிக்காமல் போனது கவலையாக இருந்தது என்று கூறியிருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவியுள்ளது.