#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வர்மா படத்தை இயக்கப் போவது கௌதமும் இல்லையா அப்ப இவர்தான் இயக்கப் போகிறாரா?
வர்மா படத்தை தெலுங்கில் இயக்கிய இயக்குனர் சந்தீப் வங்காவின் உதவி இயக்குனரை வைத்து மீண்டும் தமிழில் எடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற அர்ஜுன் ரெட்டி படத்தை தான் பாலா தமிழில் ரீமேக் செய்தார். E4 என்டர்டைன்மெண்ட் என்ற நிறுவனம் இந்த படத்தை தயாரித்தது. பட பிடிப்புகள் அனைத்தும் முடிந்து அடுத்த வாரம் படம் வெளியாக இருந்த நிலையில் படம் சரியாக வரவில்லை என்று இந்த படத்தை மறுபடியும் புதிய கூட்டணியோடு தயாரிக்க இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது. துருவ் மட்டும் இருக்க மற்றவர்கள் மாற்றப்படுவார்கள் என்றனர்.
இந்த நிலையில் மீண்டும் எடுக்கப்படும் இந்த வர்மா படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்க இருக்கதாக கூறப்பட்டது. மேலும் இந்த படத்தை இயக்க பல இயக்குனர்கள் போட்டி போடுவதாகவும் கூறப்பட்டது. எப்படியோ, படத்தின் இயக்குனர் விரைவில் ஒப்பந்தமாகி படம் வரும் ஜூன் மாதத்திற்குள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால் கௌதம் வாசுதேவனும் இல்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது. அதன்படி, ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தை தெலுங்கில் இயக்கிய சந்தீப் வங்கா வைத்து தமிழில் ‘வர்மா’ படத்தையும் இயக்க முடிவு செய்துள்ளார் படத்தின் தயாரிப்பாளர். ஆனால், சந்தீப் வங்கா ‘அர்ஜுன் ரெட்டி’ இந்தி ரீமேக்கான ‘கபீர் சிங்’ படத்தில் பிஸியாக இருப்பதால், அவரது உதவி இயக்குனர் கிரிஷையா வைத்து ‘வர்மா’ படத்தை இயக்க வைக்கவுள்ளதாக தயாரிப்பாளரிடம் தெரிவித்துள்ளார். விரைவில் இதுதொடர்பான அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.