மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வீரம், விசுவாசம்: இரண்டும் ஒரே கதையா? இரண்டு படத்திலும் என்ன ஒற்றுமை? வாங்க பாக்கலாம்!
இயக்குனர் சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக கூட்டணி சேர்ந்து நடித்துள்ளார் தல அஜித். வீரம், வேதாளம், விவேகம், தற்போது விசுவாசம். வீரம், வேதாளம் திரைப்படங்கள் வெற்றி பெற்றிருந்தாலும் விவேகம் படம் படு தோல்வி அடைந்தது. இந்நிலையில் அதே கூட்டணி நான்காவது முறையாக விசுவாசம் படத்தில் இணைந்துள்ளது.
பொங்கலை முன்னிட்டு விசுவாசம் திரைப்படம் இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படம் பற்றி பல்வேறு விமர்சனங்கள் எழுந்தாலும், வசூல் ரீதியாக படம் வசூலை வாரி குவிகிறது. படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.
வீரம், விசுவாசம். இரண்டும் ஒரே கதையா? வீரம் படத்தில் முதல் பாகத்தில் அடிதடி, வெட்டு குத்து, ஊர் பஞ்சாயத்து என கதைக்களம் அமைந்திருக்கும். அதேபோல விசுவாசம் படத்திலும் முதல் பாகத்தில் அதே அடிதடி, வெட்டு குத்து, ஊர் பஞ்சாயத்து, பேமிலி செண்டிமெண்ட் என கதைக்களம் அமைந்துள்ளது.
வீரம் படத்தின் இரண்டாம் பாகத்தில், தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்துகொள்ள, தனது காதலி ஊருக்கு செல்லும் அஜித், அங்கு தனது காதலி குடும்பத்திற்கு ஒருசிலரால் வரும் பிரச்சனைகளை சரிசெய்து தனது காதலியுடன் எப்படி இணைகிறார் என்பது கதை.
விசுவாசம் படத்தின் இரண்டாம் பாகத்தில், தனது மனைவி, தனது மகளை தேடி மும்பை செல்லும் அஜித், அங்கு ஒருசிலரால் தனது மகளுக்கு வரும் ஆபத்தை தடுத்து நிறுத்தி, தனது மகள் மற்றும் மனைவியுடன் எப்படி ஒன்றுசேர்கிறார் என்பதுதான் கதை.
படத்தின் கதை ஒன்றுபோல இருந்தாலும், வீரம் படத்தை ஒப்பிடும்போது விசுவாசம் படத்தின் திரைக்கதை, அஜித்தின் நடிப்பு, செண்டிமெண்ட் என பார்வையாளர்களை சந்தோசப்படுத்தியுள்ளனர் படக்குழுவினர்.