மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அஜித்தின் மனைவி ஷாலினி மீண்டும் நடிப்பாரா... இயக்குனர் வெங்கட் பிரபு விளக்கம்...
தமிழ் சினிமாவில் ஏராளமான பிளாக்பாஸ்டர் திரைப்படங்களில் நடித்து டாப் நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். நாடு முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்றிருக்கும் அவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் வலிமை. போனி கபூர் தயாரிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவான அந்தத் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் பெரும் வசூல் சாதனை படைத்தது.
இந்நிலையில் அஜித் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் மங்காத்தா. இப்படத்தை இயக்கிய வெங்கட் பிரபுவிடன் அஜித் மனைவி ஷாலினி மீண்டும் சினிமாவில் நடிப்பாரா என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த வெங்கட் பிரபு, எனது குடும்பத்தில் இன்னோரு ஆளையும் நடிக்க வைக்க முயற்சிக்கிறீர்களா என கேட்டு என்னை அடிப்பாரே என கூறியுள்ளார். மேலும் ஷாலினி குடும்பத்தின் மீது கவனம் செலுத்தி வருவதால் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு இல்லை எனவும் கூறியுள்ளார்.