மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"விடாமுயற்சியில் மூன்றாவதாக ஒரு நடிகை!" இவர்தானா அது!?
மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் திரைப்படம் "விடாமுயற்சி". இது அஜித்தின் 62ஆவது படமாகும். இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் நீரவ் ஷா ஒளிப்பதிவாளராக ஒப்பந்தமாகியுள்ளார்.
படத்தின் தலைப்பு மட்டும் அறிவிக்கப்பட்டு நீண்ட நாட்களாக தொடங்கப்படாமல் இருந்த இப்படத்தின் படப்பிடிப்பு, சமீபத்தில் அசர்பைஜான் நாட்டில் தொடங்கப்பட்டு தொடர்ந்து படமாக்கப்பட்டு வருகிறது. அஜித்திற்கு ஜோடியாக திரிஷா மற்றும் ரெஜினா கசான்ட்ரா ஆகியோர் நடிக்கின்றனர்.
முன்னதாக பாலிவுட் நடிகை ஹீமா குரேஷி இதில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். ஆனால் படப்பிடிப்பு தாமதமானதால் அவருக்கு பதிலாக ரெஜினா நடிக்கப்போவதாக தெரிய வந்துள்ளது. மேலும் இப்படத்தில் சஞ்சய் தத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில், மூன்றாவதாக ஒரு கதாநாயகியை படக்குழு ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த நடிகை பிரியா பவானி ஷங்கர் தான் என்றும், முதல் முறையாக இவர் அஜித்துடன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.