மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடடா... நாடோடிகள் அபிநயாவின் க்யூட்டான சைகை மொழி... நெஞ்சை நெகிழச் செய்யும் காணொளி.!
விஷால் மற்றும் எஸ்ஜே சூர்யா நடிப்பில் ஆதிக் ரவிச்சந்தர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் மார்க் ஆண்டனி. இந்தப் படம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. ஜிவி பிரகாஷ் குமார் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி வருகின்ற ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கிறது.
இதனைத் தொடர்ந்து திரைப்படத்திற்கான ப்ரோமோ வீடியோ கடந்த மூன்றாம் தேதி வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் படத்தின் கதாநாயகர்கள் மற்றும் நாயகி ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர். இந்தத் திரைப்படத்தில் நாடோடிகள் படத்தின் மூலம் பிரபலமான அபிநயா விஷாலுக்கு ஜோடியாக நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
மாற்றுத்திறனாளியான அபிநயா அந்த நிகழ்ச்சியின் போது சைகை மொழியில் பேசிய வீடியோ ரசிகர்களின் மனதை உருக்கும் வகையில் இருக்கிறது. மேடையில் தோன்றிய ஒவ்வொருவரும் திரைப்படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் டெக்னிஷங்களுக்கு நன்றி தெரிவித்த போது இவரும் தன்னுடைய சைகை மொழியில் பாவனைகள் மூலம் நன்றி தெரிவிக்க அதனை நிகழ்ச்சி தொகுப்பாளர் மொழிபெயர்த்து அறிவித்தார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆகி இருக்கிறது. வாய் பேச முடியாவிட்டாலும் அதனை ஒரு குறையாக எடுத்துக் கொள்ளாமல் தனக்குத் தெரிந்த மொழியில் பேசி அனைவரின் மனதையும் கவர்ந்திருக்கிறார் அபிநயா.