மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உடலில் 10 தையல்., தோள்பட்டையில் ஜவ்வு கிழிந்தும் ரத்தகளரியுடன் படத்தில் நடித்த சூரி..! அவரே கூறிய உண்மை..!!
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் மார்ச் 31-ம் தேதியில் திரையரங்கில் வெளியாக இருக்கும் திரைப்படம் விடுதலை முதல் பாகம். இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக சூரி நடித்து வருகிறார். மேலும் விஜய்சேதுபதி உட்பட பலரும் நடித்து வருகின்றனர்.
திரைப்படம் பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரைக்கு வருகிறது. இந்த திரைப்படத்திற்கு சான்றிதழும் தணிக்கை குழு அமைத்துள்ள நிலையில், விடுதலை படத்தின் படப்பிடிப்பின்போது சண்டைக்காட்சிகள் சூரி ஒத்திகை பார்த்துள்ளார்.
அதில் அவருக்கு தோள்பட்டையில் ஜவ்வு கிழிந்து சிரமப்பட்டுள்ளார். அதேபோல அந்த காட்சி 15 நாட்களில் படமாக்கப்பட்ட நிலையில், அதனால் கையில் 4 தையல், காலில் 6 தையல் போன்றவை சூரிக்கு போடப்பட்டுள்ளது.
அதேபோல வலதுபக்க தோள்பட்டையும் இறங்கியுள்ளது. இதனால் மருத்துவரும் சூரியிடம் படப்பிடிப்பு என்றால் இப்படித்தான் இருக்குமா? என்ற ஆச்சரியமாக கேட்க அதற்கு அவரும் ஆம் என்று பதில் சொல்லியுள்ளார்.
வெற்றிமாறன் ஒரு தருணத்தில் சண்டைக்காட்சியை படமாக்குவதை தள்ளிபோடலாம் என்று கேட்டபோது, தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படும் என்பதால் அதனை செய்ய வேண்டாம் என்று ரத்தகளரியுடன் சூட்டிங் நடந்துள்ளது.