மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விக்னேஷ்சிவன் நயன்தாரா தம்பதியினருக்கு ஏற்பட்ட அடுத்தடுத்த பிரச்சனை.?! என்ன காரணமென்று தெரியாமல் தவிக்கும் குடும்பத்தினர்.?!
முண்ணனி நடிகையான நயன்தாரா தன் காதலரான இயக்குநர் விக்னேஷ் சிவனை கடந்த ஆண்டு ஜூன் 9 ஆம் தேதியன்று திருமணம் செய்து கொண்டார். மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் நடைபெற்ற இவர்களது திருமணத்தில், சினிமா துறையின் பல முக்கிய நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.
இதன்பின் நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதியர்கள் பல்வேறு நாடுகளுக்கு தேனிலவுக்கு சென்று புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவியது. தேனிலவு கொண்டாட்டங்களை எல்லாம் முடித்துவிட்டு சென்னை திரும்பிய நயன்தாரா 'ஜவான்' படத்தின் படபிடிப்பில் பிஸியாகிவிட்டார்.
விக்னேஷ் சிவனும் அவரது அடுத்த படத்திற்கான வேலையில் பிஸியாகினார். இந்நிலையில் அஜித்தின் அடுத்தபடமான AK 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவிருந்த நிலையில் கதை பிடிக்காத காரணத்தினால் விக்னேஷ் சிவனை, AK62 லிருந்து தயாரிப்பு நிறுவனம் அதிரடியாக நீக்கியது. இதனால் இவர் மனமுடைந்து போனார்.
இது ஒருபுறமிருக்க நயன்தாரா பக்கத்திலும் பிரச்சினைகள் ஆரம்பித்தது. 'குரங்கு பொம்மை' பட இயக்குநர் நித்திலனுடன் இணைந்து ரமேஷ் பிள்ளை தயாரிப்பில் நயன்தாரா படம் பண்ணுவதாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு முன்பணம் பெற்றுள்ளார்.
மேலும், எஸ்.ஆர் பிரபு தயாரிப்பில் படம் பண்ணுவதாகவும் முன்பணம் பெற்றுக்கொண்டாராம். இரண்டு ஆண்டுகளாக நயன்தாரா தரப்பில் இருந்து பதில் ஏதும் வராததால் இந்த இரு தயாரிப்பு நிறுவனங்களும் குடுத்த பணத்தை திரும்ப பெற்றுக்கொண்டனர். நயன்தாராவின் இந்த செயலால் அவரது மார்க்கெட் சரியக்கூடும் என்று திரையுலக வட்டாரத்தில் பேசிவருகின்றனர்.