மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#HDBVigneshShivan: லேடி சூப்பர்ஸ்டாரின் மனதை வென்ற அன்பிற்கழகன்.. இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு இன்று பிறந்தநாள்.. குவியும் வாழ்த்துக்கள்..!.
தமிழ் திரையுலகில் "போடா போடி" என்ற படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக பிரபலமடைந்தவர் விக்னேஷ் சிவன். இவர் தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டுகாதல், நெற்றிக்கண் போன்ற படங்களை இயக்கியிருந்தார்.
இதன் பின் தனது 6 வருட காதலியான நடிகை நயன்தாராவை கடந்த ஜூன் மாதம் 9-ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். இவர்களது நிச்சயம் கடந்த 2021ஆம் தேதி நடைபெற்றது. அத்துடன் திருமணம் மகாபலிபுரத்தில் ஒரு பெரிய ஹோட்டலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இதன்பின் இருவரும் ஹனிமூன் சென்றிருந்த நிலையில், நயன்தாராவின் படப்பிற்காக மீண்டும் இந்தியா வந்தனர். தொடர்ந்து செஸ் ஒலிம்பியா போட்டி சம்பந்தப்பட்ட வேலையை விக்னேஷ் சிவன் செய்து கொண்டிருந்தார். இவையனைத்தும் முடிந்ததும், மீண்டும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஹனிமூன் சென்றனர்.
விக்னேஷ் சிவன் அவ்வப்போது சமூகவலைத்தளத்தில் தங்களது புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இந்த நிலையில், இன்று இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு பிறந்தநாள் என்பதால் திரைப்பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.