மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அதை ரொம்ப மிஸ் பண்றேன்.! நயன்தாராவின் புகைப்படத்தை பகிர்ந்து விக்னேஷ்சிவன் கூறியதை பார்த்தீங்களா!!
தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றித் திரைப்படங்களில் நடித்து லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. இவர் நானும் ரவுடிதான் என்ற படத்தில் நடித்தபோது அதன் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதல் வயப்பட்டார். அதனைத் தொடர்ந்து இருவரும் ஏறக்குறைய ஆறு ஆண்டுகளாக இருவரும் சிறந்த காதல் ஜோடிகளாக வலம் வருகின்றனர்.
மேலும் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக நயன்தாரா பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். மேலும் இருவருக்கும் இந்த ஆண்டு திருமணம் நடைபெறலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வர். மேலும் அந்த புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் பகிர்வர்.
தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படம் தயாராகி வருகிறது. அதில் விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த நிலையில் விக்னேஷ் சிவன்
நயன்தாராவுடன் ட்ராவல் செய்த போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டு வேலைகளை முடித்து பின் பெரிய விடுமுறை எடுக்க காத்திருப்பதாகவும், நயன்தாராவுடன் பயணம் செய்வதை ரொம்ப மிஸ் செய்வதாகவும் கூறியுள்ளார்.