#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சொன்னபடியே 100 குடும்பங்களுக்கு அள்ளிக்கொடுத்த, விஜய் தேவரகொண்டா.! குவியும் பாராட்டு.!
நடிகர் விஜய் தேவரகொண்டா, ஏற்கனவே அறிவித்ததை போல குஷி படம் வெற்றி அடைந்ததை கொண்டாடுகின்ற வகையில் கோடி ரூபாயை 100 குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் என பிரித்துக் கொடுத்துள்ளார்.
சமந்தா மற்றும் நடிகர் விஜய் தேவரகொண்டா ஆகியோர் நடித்து கடந்த செப்டம்பர் 1ம் தேதி தியேட்டர்களில் வெளியாகிய திரைப்படம் தான் குஷி. இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை கிடைத்தது. இப்படமானது 70 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. படம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய படத்தின் ஹீரோ விஜய் தேவரகொண்டா என்னுடைய சம்பளத்தில் இருந்து ஒரு கோடி ரூபாயை ஒரு லட்சம் வீதமாக 100 குடும்பங்களுக்கு பிரித்துக் கொடுப்பேன் என்று தெரிவித்து இருந்தார். அவர் சொன்னபடியே தற்போது 100 குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சத்தை பிரித்துக் கொடுத்துள்ளார். இது குறித்த புகைப்படங்களை பட தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு விஜய் தேவரகொண்டாவை பாராட்டியுள்ளது.