மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஐஸ்கிரீம் விற்று மாதத்திற்கு ஒரு லட்சம் வரை சம்பாதிக்கும் பிரபல நடிகர்.. யாரென்று தெரிந்தால் அதிர்ச்சியாகிடுவீங்க.?
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்து பின் காணாமல் போன நடிகர்கள் பலர் உண்டு. அந்த வரிசையில் விஜய், சூர்யா போன்ற முன்னணி நடிகர்கள் நடித்து வெளியான 'பிரண்ட்ஸ்' திரைப்படம் மற்றும் விஜயகாந்த் கதாநாயகனாக நடித்த 'வானத்தைப்போல' திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் பரத் ஜெயந்த்.
மேலும், பரத் ஜெயந்த் சன் தொலைக்காட்சியில் 'சகலகலா பூம்' எனும் தொடரில் குழந்தை நட்சத்திரமாகவும் நடத்திருக்கிறார். இவர் வளர்ந்த பிறகு எதிர்பார்த்த படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. மேலும் வாய்ப்பு தேடி சோர்ந்து போன பரத் ஜெயந்த், தற்போது சென்னையில் பீச்சில் ஐஸ்கிரீம் விற்றுக் கொண்டிருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
சமீபத்தில் யூ ட்யுப் சேனல் ஒன்று இவரை பேட்டி எடுத்தபோது பீச்சில் ஐஸ்கிரீம் விற்று ஒரு மாதத்திற்கு ஒரு லட்சம் வரை சம்பாதிக்கிறேன். சினிமா வாய்ப்பை விட இந்த தொழில் எனக்கு இப்போது பிடித்திருக்கிறது என்று கூறியிருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி உள்ளது.