மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா.. இப்படியொரு தீவிர ரசிகரா.! 36 மணி நேரத்தில் 10 ஆயிரம் வரிகள்.. விஜய் ரசிகர் படைத்த உலக சாதனை!!
தமிழ் சினிமாவில் ஏராளமான மாஸ், சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவருக்கென கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. நடிகர் விஜய்யின் படங்கள் வெளியாகும் நாட்கள், அவரது பிறந்தநாள் போன்றவற்றை ரசிகர்கள் கோலாகலமாக திருவிழாக்களை போல கொண்டாடுவர். மேலும் அவரைக் குறித்த எந்த தகவல் வெளிவந்தாலும் அதனை உலகளவில் ட்ரெண்டாக்குவர்.
நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் அவரது நடிப்பில் வெளிவந்து பட்டையை கிளப்பிய கில்லி படம் தமிழகம் முழுவதும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் முன்பை விட வசூலிலும் பெரும் சாதனை படைத்துள்ளது.
இந்த நிலையில் தளபதி விஜய்யின் தீவிர ரசிகரான திருப்பத்தூரை சேர்ந்த 30 வயதுமிக்க கதிர் என்பவர் கடந்த 16 ஆம் தேதி காலை 11 மணியளவில் தொடங்கி 17 ஆம் தேதி இரவு 11 மணி வரை 36 மணி நேரத்தில் சுமார் 10 ஆயிரம் வரிகள் அடங்கிய ஒரு முழு கவிதையை எழுதி உலக சாதனை படைத்துள்ளார். அவரை கௌரவிக்கும் வகையில் யுனிவர்சல் அச்சீவர் புக் ஆப் ரெக்கார்ட் மற்றும் ப்யூச்சர் கலாம் புக் ஆப் ரெக்கார்ட் ஆகிய நிறுவனங்களின் சார்பில் விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.