மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இயக்குநர் மிஸ்கினிற்கு கண்ணிர் அஞ்சலி.? வைரலாகும் போஸ்டர்.!
2006ம் வருடம் "சித்திரம் பேசுதடி" திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மிஷ்கின். இதனை தொடர்ந்து அஞ்சாதே, நந்தலாலா, யுத்தம் செய் போன்ற வித்யாசமான கதைகள் மற்றும் காட்சியமைப்புகள் கொண்ட படங்களை இயக்கி தமிழ் ரசிகர்களை கவர்ந்தார்.
தற்போது மிஷ்கின் ஒரு சில திரைபடங்களில் நடித்தும் வருகிறார். இந்நிலையில், டிஜிட்டல் ட்ரீம்ஸ் கலைக் கண்காட்சியின் துவக்கவிழா, நேற்று சென்னை மயிலாப்பூர் சிஐடி காலனியில் நடைபெற்றது. இதில் இயக்குனர்கள் மிஷ்கின், மணிரத்னம் உள்ளிட்ட பல பிரபபங்கள் கலந்து கொண்டனர்.
இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த மிஷ்கின், " நம் அனைவருடைய பார்வைகளும் இயற்கையை நோக்கியே இருக்கும். இங்கிருக்கும் ஓவியங்கள் அதை தான் நமக்கு காட்டுகின்றன. "லியோ" படம் மிகவும் நன்றாக வந்திருக்கிறது.
விஜய் தம்பி லியோ திரைபடத்தை பார்த்தான். விஜய் தம்பிக்கும் படம் மிகவும் பிடித்துள்ளது என்று பேசியிருந்தார். இதில் நடிகர் விஜயை மரியாதை குறைவாக பேசிவிட்டதாக விஜயின் ரசிகர்கள் மிஸ்கினிற்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டரை எடிட் செய்து இணையத்தில் பதிவு செய்து வருகின்றனர்.