#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பிகில் படம் வெற்றிபெற விஜய் ரசிகர்கள் செய்த காரியத்தை பார்த்தீர்களா.! தீயாய் பரவும் புகைப்படம்!!
அட்லீ இயக்கத்தில் மூன்றாவது முறையாக கூட்டணியில் இணைந்து விஜய் நடித்துள்ள படம் பிகில். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவாகிவரும் இந்த படத்தில் விவேக், டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷெராப், கதிர், சவுந்தரராஜா, யோகி பாபு, இந்துஜா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி இணையத்தையே அதிர வைத்தது.
மேலும் பிகில் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 25-ஆம் தேதி வெளிவர உள்ளது என தகவல்கள் வெளி வந்தநிலையில் ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் பிகில் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற வேண்டும் என வேண்டி நாகை வடக்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மயிலாடுதுறையில் அமைந்துள்ள பிரசன்ன மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மேலும் விஜய்ரசிகர்கள் கோவில்வளாகத்தில் தரையில் சாதம் போட்டு மண்சோறு சாப்பிட்டு பிரார்த்தனை மேற்கொண்டுள்ளனர். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.