திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்த விஜய்..!! நாளை பனையூரில் ஆலோசனை கூட்டம்..!!
நாளை காலை 9 மணிக்கு விஜய் மக்கள் இயக்கத்தின் தொகுதி பொறுப்பாளர்களுடன் நடிகர் விஜய் ஆலோசனை நடத்த உள்ளார்.
நடிகர் விஜய் நடிப்பையும் தாண்டி தற்போது அரசியலில் தன்னை ஈடுபடுத்தி கொள்ள அவ்வப்போது ஏதேனும் முயற்சிகள் செய்து வருகிறார். அந்த வகையில் கடந்த மாதம், தேர்வு எழுதிய மாணவ மாணவிகளை அழைத்து பாராட்டும் நோக்கத்துடன் ஒரு விழா அமைத்து வெகு விமர்சையாக கொண்டாடினார்.
இந்த நிகழ்வு குறித்து சமூகவலைத்தளங்களில் பெரும் அளவு பேசப்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து தற்போது, விஜய் மக்கள் இயக்கத்தின் தொகுதி பொறுப்பாளர்களுடன் சென்னையில் உள்ள பனையூரில் அலசோனை கூட்டம் நடத்தவுள்ளார். இந்த கூட்டம் நாளை காலை 9 மணியளவில் நடக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த கூட்டத்தில் கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சியில் சிறப்பாக நடத்தி கொடுத்த நிர்வாகிகளை சந்தித்து பாராட்ட இருப்பதாக தெரிகிறது. இன்னும் சிலர் தேர்தல் குறித்து ஏதேனும் முன்ஆலோசனை கூட்டம் என்று கூறுகிறார்கள்.
#NewsUpdates : நிர்வாகிகளை சந்திக்கும் நடிகர் விஜய்#Vijay #VijayMakkalIyakkam #NewsTamil24x7 pic.twitter.com/s5NC3FtiVX
— News Tamil 24x7 | நியூஸ் தமிழ் 24x7 (@NewsTamilTV24x7) July 10, 2023