#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
“ரசிகனை மதிக்க தெரிந்த தலைவன்” விஜய் செய்த செயலால் ரசிகர்கள் உற்சாகம்
காரில் படப்பிடிப்பிற்காக சென்ற நடிகர் விஜய் தனது ரசிகர்களை கண்டதும் காரில் இருந்து இறங்கி வந்து கையசைத்துவிட்டு செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.
இளைய தளபதி விஜய் நடிக்கும் 63வது படத்தின் படப்பிடிப்பு கடந்த 20 ஆம் தேதி முதல் பூஜையுடன் தொடங்கியது. சர்க்கார் வெற்றியைத் தொடர்ந்து விஜய்யின் அடுத்த படத்திற்காக அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
தெறி, மெர்சல் வெற்றிப்படங்களை தொடர்ந்து இளையதளபதி விஜய்யின் 63ஆவது படத்தை மீண்டும் அட்லி இயக்குகிறார். ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக நயன்தாராவும், மேலும் முக்கிய வேடங்களில் காமெடி நடிகர்கள் விவேக், யோகி பாபு மற்றும் பரியேறும் பெருமாள் படத்தில் நடித்த கதிர் ஆகியோர் நடிக்கின்றனர்.
இந்நிலையில் இந்த படத்தின் படபிடிப்பிற்காக நடிகர் விஜய் நேற்று சென்னை பின்னி மில்லிற்கு காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது விஜய் அந்த வழியாக வருவதை அறிந்த ரசிகர்கள் சாலையில் கூடினர். இதனால் அந்த சாலை பெரும் பரபரப்பாக காணப்பட்டது. போலீசார்கள் முயன்றும் விஜயை பார்க்காமல் ரசிகர்கள் கலைந்து செல்வதாயில்லை.
ரசிகர்கள் "தளபதி.. தளபதி.." என்று கத்தியவாறே இருந்தனர். ரசிகர்கள் காத்திருப்பதை முன்கூட்டியே அறிந்த விஜய் அருகில் சென்றதும் காரில் இருந்து இறங்கி ரசிகர்கள் அருகில் சென்று கையசைத்துவிட்டு மீண்டும் காரில் ஏறி சென்றுவிட்டார்.
Another clear video #ThalapathyVIJAY#Thalapathy63 ~@Vijay63_Movie pic.twitter.com/ocJOGycp37
— #Thalapathy63 (@Vijay63_Movie) January 24, 2019
விஜய் கீழே இறங்கி வந்ததை கண்ட ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் ஆர்ப்பரிக்க துவங்கிவிட்டனர். மேலும் அப்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றும் இணையத்தில் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் காத்திருப்பதை உணர்ந்து காரிலிருந்து இறங்கி வந்து கையசைத்து சென்ற விஜயினை ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.