குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
விஜய் சேதுபதியை இயக்கபோகும் மிஸ்கின்.! வெளியானது புதிய தகவல்!
2006ம் ஆண்டு "சித்திரம் பேசுதடி" திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் மிஷ்கின். தொடர்ந்து இவர் அஞ்சாதே, நந்தலாலா, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு ஆகிய படங்களை இயக்கி, நல்ல விமர்சனங்களைப் பெற்றுள்ளார்.
மேலும் இவர் இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், நடிகர், பாடகர், தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளர் என்று பன்முகத் திறமை கொண்டவராக உள்ளார். தற்போது ஆண்ட்ரியாவை வைத்து "பிசாசு 2" படத்தை இயக்கி ரிலீசுக்கு காத்திருக்கிறார்.
2010ம் ஆண்டு அவர் இயக்கிய "நந்தலாலா" படத்தில் மனநலம் குன்றிய நபராக நடித்து, நடிகராக அறிமுகமானார் மிஸ்கின். தொடர்ந்து சில படங்களில் நடித்துள்ள இவர், சிவகார்த்திகேயனுடன் மாவீரன் படத்திலும், தற்போது விஜயுடன் லியோ படத்திலும் நடித்துள்ளார்.
இந்நிலையில், மிஸ்கின் அடுத்தபடியாக விஜய் சேதுபதியை ஹீரோவாக வைத்து ஒரு புதிய படத்தை இயக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.