#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஓட்டு போட சைக்கிளில் போனது ஏன்? பின் மகன் கேட்ட அந்த கேள்வி! சுவாரஸ்மான உண்மையை உடைத்த நடிகர் விஜய்!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13ம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தை நெல்சன் இயக்கியுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதற்காக ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் நடிகர் விஜய் 10 ஆண்டுகளுக்கு பிறகு அண்மையில் பிரபல தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் இயக்குனர் நெல்சன் கேட்ட கேள்விகளுக்கு மிகவும் ஓபனாகவும், சுவாரஷ்யமாகவும் பதிலளித்துள்ளார். அப்பொழுது அவர் தன் தந்தை, மகன், அரசியல் குறித்து பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அப்பொழுது இயக்குனர் நெல்சன் நடிகர் விஜய்யிடம், நான்கு கார் இருக்கும் போது நீங்கள் ஏன் சட்டசபை தேர்தலின்போது ஓட்டு போட சைக்கிளில் சென்றீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு அவர், நான் எதர்த்தமாகவே சைக்கிளில் சென்றேன். வீட்டிற்கு பின்புதான் பள்ளி இருந்தது. மாடியில் இருந்து இறங்கி வந்த போது என் மகனின் சைக்கிள் இருந்தது. உடனே அவருடைய ஞாபகம் வந்ததால் சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டேன். வேறு எந்த நோக்கமும் இல்லை என கூறியுள்ளார்.
மேலும் ஓட்டு போட்டுவிட்டு வந்த பிறகு அந்த செய்தியை பார்த்த எனது மகன் உடனே எனக்கு போன் செய்து, அதெல்லாம் சரி. என் சைக்கிளுக்கு ஒன்றும் ஆகவில்லையே என கேட்டதாகக் கூறி சிரித்துள்ளார். அப்போது விஜய்யின் மகன் சஞ்சய் கனடாவில் படித்துக் கொண்டு இருந்துள்ளார்.