மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"அந்த மாதிரி செலிபிரிட்டிய ஓங்கி அறையனும் போல இருக்கு"- கடுப்பான விஜய் டீவி ஜாக்குலின்.!
விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்னும் தொடரின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் ஜாக்குலின். அதன் பிறகு இவர் விஜய் டிவியில் தொகுப்பாளினியாகவும் பணியாற்றிக் கொண்டிருந்தார். 'கலக்கப்போவது யாரு' என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதில் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவர் இவர்.
தற்போது தனது தொகுப்பாளர் பணியை விட்டுவிட்டு யூட்யூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து நடத்திக் கொண்டிருக்கிறார். தனது யூட்யூப் சேனலில், தான் ஏன் தொகுப்பாளர் பணியை விட்டுவிட்டு வந்தேன் எனவும் விளக்கம் அளித்திருக்கிறார் ஜாக்குலின். இந்த வீடியோ தற்போது வைரலாக இருக்கிறது.
இது பற்றி மனம் திறந்து உள்ள அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றும்போது நிகழ்ச்சிக்கு வரும் பிரபலங்கள் மிகவும் அநாகரிகமாக நடந்து கொள்வதை சுட்டிக்காட்டினார். அனுமதி இல்லாமல் தொடுவது போன்ற அருவருக்கத்தக்க வேலைகளில் ஈடுபடுவதையும் தெரிவித்திருக்கிறார் அவர்.
நாம் அந்த பிரபலங்களை பார்க்கும் போது அவர்களின் மீது மிகப்பெரிய மதிப்பு வைத்திருப்போம். ஆனால் அவர்களின் இத்தகைய செயல்களை பார்க்கும்போது நமக்கு அவர்களை ஓங்கி அடிக்க வேண்டும் என்பது போன்ற கோபம் வரும் என தனது வீடியோவில் தெரிவித்து இருக்கிறார் ஜாக்குலின். மேலும் இவர் நயன்தாரா மற்றும் யோகி பாபு நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தில் நயன்தாராவின் தங்கையாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.