மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடடே.. விஜய் டிவி புகழுக்கு திருமணமாமே..! காதலியுடன் போட்டோஷூட் நடத்தி அவரே வெளியிட்ட தகவல்..!!
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற நிகழ்ச்சிதான் குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் புகழ்.
இவர் குக் வித் கோமாளி சீசன் 2-ன் முடிவில் 8 படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். மேலும் அஜித், சந்தானம், சூர்யா போன்ற பல முன்னணி நட்சத்திரங்களுடன் படங்களில் நடித்துவரும் புகழ், அடுத்ததாக "Zoo Keeper" என்ற ஒரு படத்திலும் ஹீரோவாக அறிமுகமாகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. அத்துடன் நடிகர் புகழ், பென்ஸ் ரியா என்பவரை காதலிப்பதாக கூறிய நிலையில், சில மாதங்களில் தங்களுக்கு திருமணம் என்றும் கூறியிருந்தார்.
அத்துடன் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காதலியுடன் போட்டோசூட் நடத்தி புகைப்படத்தின் கீழ் "Coming Soon" என்று கேப்ஷன் எழுதி பதிவு செய்தார். இதன் மூலம் நடிகர் புகழுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்று உறுதியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.