மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடடே.. பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை கதாபாத்திரத்தில் காவ்யாவுக்கு பதில் அடுத்து நடிக்கப்போவது இவரா?.. நீங்களே பாருங்க..!!
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் தொடர்ந்து 3 வருடங்களுக்கும் மேலாக சிறப்பாக ஒளிபரப்பாகும் நெடுந்தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த நெடுந்தொடர் அண்ணன், தம்பிகளின் பாசகதையை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாகி வருகிறது.
இத்தொடரில் இதுவரையிலும் சில நடிகர்களிலே மாற்றம் நடந்துள்ளது என்றாலும், அதில் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு கதாபாத்திரம் முல்லை. நடிகை சித்ரா தற்கொலை செய்து இறந்தபின், இந்த கதாபாத்திரத்தில் யார் நடிப்பார்? என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், பாரதி கண்ணம்மாவில் நடித்து வந்த காவியா அறிவுமணி முல்லை கதாபாத்திரத்தில் நடித்தார்.
முதலில் இதனை ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அதன் பின் இவர்தான் முல்லை கதாபாத்திற்கு சரியானவர் என்று கூறும் அளவிற்கு தனது நடிப்பு திறமையை வெளிக்காட்டினார். இந்த நிலையில் அவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரைவிட்டு வெளியேற இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
மேலும் அடுத்ததாக முல்லை கதாபாத்திரத்தில் அபிநயா நடிக்க இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இவர் இதற்கு முன்னதாக பாண்டியன் ஸ்டோர்ஸில் சித்ராவின் தோழியாக ஒரு காட்சியில் வந்து போவார். ஆனால் இத்தகவல் வதந்தியா? அல்லது உண்மையா? என்பது தெரியவில்லை.