சீப் பப்ளிசிட்டிக்காக இப்படியா காமிக்கிறது? நடிகையை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்.!
#RajaRani2: பரபரப்பாகும் தேர்தல்களம்.. சரவணனுக்கு ஆப்பு வைத்த செந்தில்?.. கைது செய்த காவல் துறை..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில், 2ம் சீசனில் ஒளிபரப்பாகி வரும் தொடர் ராஜா ராணி 2. கடந்த வாரம் வரையில் சந்தியா தனக்கு வரும் பிரச்சனைகளை எதிர்கொண்டு முழு ஐ.பி.எஸ் அதிகாரியாக உருவாக பல முயற்சிகளை மேற்கொண்டு வந்தார்.
அவரின் வெற்றியும் படிப்படியாக சாத்தியமாகிக்கொண்டு வந்த நிலையில், தொழிற்சங்க போட்டியில் அண்ணன் - தம்பியாக இருந்த சரவணன் - செந்தில் அங்காளி பங்காளியாக மாறி சண்டையிட்டுக்கொண்டு இருக்கின்றனர். தனக்கு பின்னால் நடக்கும் சூழ்ச்சியை அறியாத செந்திலும் அப்பாவையாக கைப்பாவை போல செயல்பட்டு வருகிறார்.
இந்த நிலையில், நடப்பு வாரத்தில் என்ன நடக்கும் என பார்வையாளர்கள் தங்களின் பல்ஸை கையில் பிடித்தவாறு இருந்த நிலையில், சரவணனின் கடைக்கு திடீரென சோதனை நடத்தும் உணவுத்துறை அதிகாரிகள் அவர் கலப்பட எண்ணெய் உபயோகம் செய்ததாக அறிவித்து காவல் துறையினரால் கைது நடவடிக்கை எடுக்கின்றனர்.
அப்போது, சரவணனுக்கு ஆதரவாக செயல்படும் ஊர் மக்கள், காவல் நிலையத்திற்கு முன்பு சென்று நியாயம் கூறி சண்டையிடுகின்றனர். இதுகுறித்த சம்பவத்துக்கு பின்னணியில் யார்? இருக்கிறார் என்ற யோசனையோடு சரவணனும் திகைக்கிறார். இதனால் நடப்பு வாரம் பரபரப்புப்பு பஞ்சம் இருக்காது.