#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வாவ்!! சேலையில் சிலைபோல் போஸ் கொடுத்துள்ள சரவணன் மீனாட்சி ரக்ஷிதா!! வைரல் புகைப்படங்கள் இதோ!!
விஜய் டிவி சரவணன் மீனாட்சி புகழ் ரக்ஷிதா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சில இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகிவருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடர் ரசிகர்களின் வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிபெற்றது. பல சீசன்கள் ஒளிபரப்பாகியுள்ள இந்த தொடரில், தொடர்ந்து மீனாட்சியாக நடித்துவந்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் ரக்ஷிதா.
இவரது தனிப்பட்ட நடிப்பு திறமையால், சின்னத்திரை சீரியல் நடிகைகள் மத்தியில் பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்ட நடிகைகளில் ஒருவராக உயர்ந்தார். சரவணன் மீனாட்சி தொடர் முடிவடைந்த பிறகு ஜீ தமிழ் பக்கம் சென்ற இவர், தற்போது மீண்டும் விஜய் தொலைக்காட்சியில் நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2 இல் நடித்துவருகிறார்.
சீரியல் மட்டும் இல்லாமல் ஒருசில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார் ரக்ஷிதா மகாலட்சுமி. என்னதான் சீரியல், சினிமா என பிசியாக இருந்தாலும், அம்மணி சமூக வலைத்தளங்களில் அதைவிட பயங்கர பிசியாக இருந்துவருகிறார். இந்நிலையில் சேலை அணிந்து, சிலை போல போஸ் கொடுத்துள்ள அவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.