"கோழைகளே... கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்.." ஜிபியு விமர்சனம்.!! நடிகை திரிஷா பதிலடி.!!
பலவருடத்திற்கு முன் விஜய் தன் மடியில் தூக்கி வைத்திருக்கும் இந்த குழந்தை யார் தெரியுதா.? அட.! இந்த பிரபல நடிகரா அது?

தளபதி விஜய் தனது சிறு வயதில் சிறுவன் ஒருவரை மடியில் வைத்து அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மாஸ்டர் படப்பிடிப்பை முடித்துவிட்டு தற்போது ஓய்வில் இருக்கும் நடிகர் விஜய் அடுத்ததாக இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருப்பதாகவும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக தமன்னா நடிக்க இருப்பதாகவும் சமீபத்தில் செய்திகள் வெளியாகியது.
இது ஒருபுறமிருக்க மாஸ்டர் படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து விட்டாலும் கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் திறக்கப்படாமல் இருக்கும் நிலையில் மாஸ்டர் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மாஸ்டர் படத்தின் அப்டேட்டிற்க்காக காத்திருக்கும் அவரது ரசிகர்களுக்கு தர்ப்பித்து தீனி போடும் வகையில் விஜய்யின் சிறுவயது புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த புகைப்படத்தில் விஜய் தனது அம்மாவுடன் அமர்ந்திருக்கும் நிலையில் விஜய் தனது மடியில் சிறுவன் ஒருவரை அமர வைத்தவாறு ஒரு புகைப்படம் ஒன்று வைரலாகிவருகிறது. விஜய் அவரது மடியில் வைத்திருக்கும் இந்த சிறுவன் யார் என்று கேள்விகள் எழுந்த நிலையில் அவர் வேறு யாருமில்லை விஜய்யின் தம்பி விக்ராந்த் தான் அது.
என்னது இது நடிகர் விக்ராந்த் தானா என ரசிகர்கள் இந்த புகைப்படத்தை ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.
Thalapathy Childhood Unseen Stills HQ! @actorvijay #Master pic.twitter.com/bpBDAcELbO
— Vijaysm Kerala (@VijaysmKL) September 13, 2020