நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு.! துடிதுடித்து போன அமைச்சர் விஜயபாஸ்கர்.! மருத்துவர்களிடம் நேரடி தொடர்பு.!
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக ஏராளமான ரசிகர்களை தனது நகைச்சுவையால் கவர்ந்தவர் நடிகர் விவேக். இவருக்கு நேற்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது ரசிகர்கள் இடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள விவேக்கின் உடல்நிலையை மருத்துவர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். நடிகர் விவேக்கிற்கு 'எக்மோ' சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதயம் மற்றும் நுரையீரல் செயல்பாட்டை சீர்செய்ய 'எக்மோ' கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
Disappointed to hear about your cardiac arrest @Actor_Vivek . My prayer and wishes to you. I have spoken to the SIMS Directors and closely coordinating with the treating team. Get well soon. #Vivek
— Dr C Vijayabaskar (@Vijayabaskarofl) April 16, 2021
இந்த நிலையில் விவேக்கின் உடல்நிலை குறித்து தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் விசாரித்து உள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், "உங்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டது பற்றி கேள்விப்பட்டு மிகவும் வருந்தினேன். என்னுடைய பிரார்த்தனைகளும் வாழ்த்துகளும் உங்களுக்கு உண்டு. சிம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர்களிடம் பேசினேன். சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களிடம் தொடர்பில் உள்ளேன். விரைவில் நலம்பெற வேண்டும் விவேக்" என கூறியுள்ளார்.