மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ராதிகாவை கன்னத்தில் ஓங்கி அறைந்த விஜயகாந்த்.. பேட்டியில் உண்மையை உடைத்த பிரபலம்.?
கேப்டன் விஜயகாந்த் என்றால் தெரியாதவர்களே இல்லை. கருப்பு எம்ஜிஆர் என்று மக்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் விஜயகாந்த். அதற்கு காரணம் எம்ஜிஆர்-ஐப் போலவே, தான் சம்பாதித்த பணத்தில் பொதுமக்களுக்கு உதவிகள் செய்து வந்தார்.
"இனிக்கும் இளமை" படத்தில் முதன் முதலில் வில்லனாக தான் அறிமுகமானார் விஜயகாந்த். இதன்பிறகு, ஹீரோவாக வைதேகி காத்திருந்தாள், நீதியின் மறுபக்கம், புதுயுகம், வீட்டுக்கு ஒரு கண்ணகி, எங்கள் அண்ணா, சாட்சி, சட்டம் ஒரு இருட்டறை போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
ஒரே ஆண்டில் 18 வெற்றிப்படங்களைக் கொடுத்தவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான விஜயகாந்த், கிட்டத்தட்ட 150 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். ஆரம்ப காலங்களில் விஜயகாந்த் - ராதிகா ஜோடி சேர்ந்து நடித்த படம் என்றால் நிச்சயம் வெற்றிப் படமாக இருந்தது.
இந்நிலையில்,இயக்குனர் செந்தில்நாதன் ஒரு பேட்டியில், " பூந்தோட்டக் காவல்காரன் படத்தில், விஜயகாந்துக்கு ஜோடியாக நடித்த ராதிகாவை, விஜயகாந்த் அடிப்பது போன்ற ஒரு காட்சியில், நிஜமாகவே விஜயகாந்தின் கை ராதிகாவின் காதில் பட்டு, அவர் வலியில் கீழே விழுந்துவிட்டார்" என்று கூறியுள்ளார். இச்செய்தி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.