மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"அந்த மனசு தாங்க எல்லாமே".. வீட்டுப்பணியாளரின் இல்ல திருமணத்தில் சீயான் விக்ரம் செய்த செயல்.. என்னன்னு நீங்களே பாருங்க..! அசந்துருவீங்க..!!
கோலிவுட் சினிமாவில் பல வேடங்களில் வித்தியாசமாக நடித்து ரசிகர்களை கவரும் நடிகர் விக்ரம். இவரின் வீட்டில் பல ஆண்டுகளாக பணியாற்றி மறைந்தவர் ஒளிமாறன். அவரது மனைவி மேரி என்பவரும் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக நடிகர் விக்ரம் வீட்டில் பணியாற்றி வருகிறார்.
இவர்களது மகனான தீபக் என்பவருக்கும், மணமகள் வர்ஷினி என்பவருக்கும் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து திருப்போரூரில் உள்ள கந்தசாமி ஆலயத்தில் தீபக் - வர்ஷினியின் திருமணத்தில் நடிகர் விக்ரம் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
அத்துடன் விக்ரமின் ரசிகர்கள் மற்றும் ரசிகர் மன்ற நிர்வாகிகளும் உடனிருந்து மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வைரலாகவே, ரசிகர்கள் பலரும் அந்த மனசு தாங்க எல்லாமே என்று கூறிவருகின்றனர்.